Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

நெல் விற்பனைக்கு ஆன்லைன் முன்பதிவு முறையை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் - விவசாயிகள் மறியல், காத்திருப்பு, முற்றுகை போராட்டம் :

தஞ்சாவூரில் நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக, நெல் விற்பனைக்கு ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்யக் கோரி நெல்லை துண்டில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தஞ்சாவூர்

நெல் விற்பனைக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் நேற்று விவசாயிகள் சாலை மறியல், கொள்முதல் நிலையம் முற்றுகை, காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் விவசா யிகள் விளைவித்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய, முன்னதாகவே ஆன்லைனில் பதிவு செய்து, அதன் பின்னர், கொள்முதல் நிலையத்தினர் குறிப்பிட்ட நாளில் நெல்லை கொண்டு வருமாறு கூறியபின், நெல் மூட்டைகளை கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அக்.1-ம் தேதி (நேற்று) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்த புதிய நடைமுறைக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக கடந்த 2 நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியை விவசாயிகள் புறக்கணித்தனர்.

இந்நிலையில், கடந்தாண்டுக் கான கொள்முதல் பருவ கணக்கை முடிக்க கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. எனினும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கொள் முதல் நிலையங்களில் விவசாயி கள் விற்பனை செய்ய நெல் மூட்டைகளை குவித்து வைத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காத்திருந்தனர். அவர்களிடம் அக்.1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிகழாண்டுக் கான (2021-2022) கொள்முதல் பருவம் நேற்று தொடங்கியது. மேலும், நெல் கொள்முதலுக்கு புதிய நடைமுறையும் நேற்று முதல் தொடங்கியதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல அலுவலகத்தின் முன்பாக, விவசாய சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை ஆர்.சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் நெல்லை துண்டில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அலுவலகத்தின் உள் பகுதிக்குச் சென்று அங்கு தரையில் படுத்து, காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் முத்தையா, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கொள் முதல் நிலையங்களில் தற்போது தேங்கியுள்ள மூட்டைகள் பழைய முறைப்படி கொள்முதல் செய்யப்படும், எங்கெங்கு விற்பனைக்கு நெல் உள்ளதோ அங்கு உடனடியாக கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என உத்த ரவாதம் அளித்ததால், விவசாயி கள் போராட்டத்தை கைவிட்டனர்.

சாலை மறியல்

இதேபோல, ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்து, பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டி கடைவீதியில் விவசாயிகள் டிராக் டரை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர், போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

முற்றுகை போராட்டம்

மேலும், தஞ்சாவூர் அருகே ராராமுத்திரக்கோட்டை கொள் முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x