Published : 02 Oct 2021 06:42 AM
Last Updated : 02 Oct 2021 06:42 AM

சிவாஜிகணேசன் பிறந்த தினவிழா :

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிசார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த தினவிழா நடைபெற்றது.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். கலைப்பிரிவு தலைவர் கஸ்பர் ராஜ், ஐஎன்டியுசி நிர்வாகி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிறுபான்மைபிரிவு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாவட்ட துணைத் தலைவர் உதயகுமார், பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x