Published : 01 Oct 2021 03:18 AM
Last Updated : 01 Oct 2021 03:18 AM
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.37.45 லட்சம் மதிப்பில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
அதன்படி, சின்னமேலுப்பள்ளியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் திருப்பதி வேளாண் டிராக்டர் மற்றும் உழவர் வாடகை சேவை மைய செயல்பாடுகள், பி.ஜி.புதூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில தென்னை நாற்றங்கால் உற்பத்தி மையம், கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங் களின் பயன்பாடுகள், நாரலப்பள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் சார்பாக பண்ணை வேளாண் இயந்திரகளின் பயன்பாடுகள், கோதிகுட்லப் பள்ளியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மா அடர் நடவு பணிகள், பிரதம மந்திரி கிஷான் சஞ்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் மூலம் தக்காளி, மிளகாய், பட்டன் ரோஸ் நடவு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். அப்போது அவர் விவசாயிகளிடம் வேளாண் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் உதவி இயக்குநர் செந்தில், வேளாண்மை உதவி இயக்குநர் முருகன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, சிவக்குமார், பண்ணை மேலாளர் புனிதவள்ளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT