Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

கரோனா தடுப்பூசி போடாதவர்கள் குறித்து - ஏரல் பேரூராட்சி பகுதியில் மாணவர்கள் கணக்கெடுப்பு :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் சாயர்புரம் போப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமாணவர்கள் கரோனா தடுப்பூசி போடாதவர்கள் குறித்து வீடு வீடாகச்சென்று கணக்கெடுப்பு நடத்தினர்.

ஏரல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி தினேஷ் தலைமை வகித்து இப்பணியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார்.

கணக்கெடுப்பு பணியின் முக்கியத்துவம் குறித்து நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் தினகரன், ஸ்டேன்லி டேவிட் பிச்சை ஆகியோர் எடுத்துரைத்தனர். நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேசம் மாணவ மேம்பாட்டு திட்ட தன்னார்வ தொண்டர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் என சுமார் 70 பேர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று 18 வயதுக்கு மேற்பட்டோர் எத்தனை பேர் உள்ளனர், அதில் எத்தனை பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என்ற விவரங்களை சேகரித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர்கள் பிச்சாண்டி, சரவணன், தர் ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x