Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

பரமக்குடியில் சாலை மறியல் 11 பாஜகவினர் மீது வழக்கு :

ராமநாதபுரம்

பரமக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 11 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பரமக்குடியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களில் முதல்வர் ஸ்டாலின் படம் இடம் பெற்றிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறவில்லை. இதைக் கண்டித்து பாஜகவினர் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் உட்பட 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x