Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM
விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் கதிரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மற்றும் கள்ளக் குறிச்சி மாவட்டங்களில் தற்போது சம்பா பருவம் தொடங்கியுள்ளது. இப்பருவத்தில் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சான்று பெற்ற விதை கொள்கலன்களில் விதை உற்பத்தியாளர் அட்டை மற்றும் விதைச்சான்றளிப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றட்டை என இரண்டு அட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
சான்றட்டையில் ரகம், நிலை, விதைச்சான்று எண்,பகுப்பாய்வு நாள், காலாவதி நாள் மற்றும் அளவு போன்ற விதை விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். உற்பத்தியாளர் அட்டையில் விதை விவரம் மற்றும் பகுப்பாய்வு விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். அனைத்து பயிர்களுக்கும் தரமான சான்று விதையின் இனத்தூய்மை குறைந்த பட்சம் ஆதார நிலை விதைக்கு 99% இருத்தல் அவசி யம். அதே போன்று சான்று விதைகளின் இனத்தூய்மை குறைந்த பட்சம் 98% இருத்தல் வேண்டும்.
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதால் நல்ல முளைப்புத்திறன் சீரான பயிர் வளர்ச்சி, ஒரே நேரத்தில் அறுவடை மற்றும் கலப்படமில்லாத அதிக மகசூல் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT