Published : 22 Sep 2021 03:07 AM
Last Updated : 22 Sep 2021 03:07 AM
கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.கண்ணையன் அறிமுக ஆலோசனைக்கூட்டம் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாமசுந்தரி தலைமை வகித்து, வேட்பாளர் ஏ.கண்ணையனை அறிமுகம் செய்து வைத்து பேசினார். திமுக மாநில சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் முன்னிலை வகித்து பேசினார்.
தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தாந்தோணி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் எம்.ரகுநாதன், கரூர் தெற்கு நகரப் பொறுப்பாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT