பெரம்பலூரில் 32 கூட்டுப் பொறுப்பு குழுக்களுக்கு ரூ. 1.92 கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கல் :

பெரம்பலூரில் 32 கூட்டுப் பொறுப்பு குழுக்களுக்கு ரூ. 1.92 கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கல் :

Published on

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நபார்டு வங்கி, கனரா வங்கி மற்றும் மறுமலர்ச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு கறவை மாடு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா கலந்துகொண்டு 32 கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு தலா ரூ.6 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1.92 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: கறவை மாடு கடன் பெறும் அனைவருக்கும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கறவை மாடுகளுக்கு குறைந்த செலவில் சத்து மிகுந்த உணவு அளிப்பது குறித்தும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன் குமார், கனரா வங்கி உதவி பொது மேலாளர் கிருஷ்ண காந்த், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in