Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
அவிநாசி அருகே சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடித்து, விளம்பரப் பலகை வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி நடுவச்சேரி கருக்கன்காட்டுபுதூரை சேர்ந்தவர் பசுமை ஆர்வலர் கார்த்திகேயன். இவரும், அப்பகுதியை சேர்ந்த சிலரும் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் ‘‘சேவூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை, அவிநாசி மடத்துப்பாளையம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் உட்பட சில தனியார் நிறுவனங்கள் அவிநாசியில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடித்து, அவர்களது நிறுவனத்தின் விளம்பரப் பலகைகளை வைத்துள்ளனர்.
இதனால் தொடர்புடைய மரங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் வாழ்நாள் குறைகிறது. எனவே மரங்களில் விளம்பரப் பலகைகளை அடித்துள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு, மரத்தில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மரங்களை சேதப்படுத்தியவர்கள் தலா 100 மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT