Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM
கரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கரூர் வட்டாட்சியராக ஆர்.மோகன்ராஜ், கரூர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (சில்லறை விற்பனை) உதவி மேலாளராக ப.சக்திவேல், குளித்தலை வட்டாட்சியராக ஆர்.விஜயா, குளித்தலை சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக டி.கலியமூர்த்தி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேற்பார்வை அலுவலராக (கலால்) எம்.வேலுசாமி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியராக எஸ்.வெங்கடேசன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குளித்தலை காவிரி (கட்டளை) தெற்கு வெள்ளாறு இணைப்பு கால்வாய் திட்ட அலகு 2 தனி வட்டாட்சியராக(நிலம் எடுப்பு) க.மகுடீஸ்வரன், ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராக எம்.ராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி வட்டாட்சியராக கு.அருள் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, புகழூர் வட்டாட்சியராக எஸ்.மதிவாணன், கரூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக பெ.செந்தில்குமார், கரூர் காவிரி (கட்டளை) தெற்கு வெள்ளாறு இணைப்பு கால்வாய் திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக வட்டாட்சியராக ஏ.ஈஸ்வரன், கடவூர் வட்டாட்சியராக எம்.ராஜாமணி, கரூர் நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியராக ஆர்.வித்யாவதி, கரூர் வட்ட சாலை அலகு 1 தனி வட்டாட்சியராக(நிலம் எடுப்பு) பொ.பழனி, கிருஷ்ணராயபுரம் காவிரி (கட்டளை) தெற்கு வெள்ளாறு இணைப்பு கால்வாய் திட்டம் அலகு 1 தனி வட்டாட்சியராக (நிலம் எடுப்பு) ஆர்.செந்தில் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT