Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங் களில் உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கசோதனை தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.
இதற்காக, மாவட்ட எல்லைகள் மற்றும் ஆந்திர எல்லையோரம் கூடுதல் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க உதவி ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் தலைமையில் பறக்கும் படைகளை அமைத்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களிலும் 52 பேர் அடங்கிய 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்ய உள்ளனர். இதற்காக முக்கிய சாலைசந்திப்புகளில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்
இந்நிலையில், வாக்காளர் களுக்கு பரிசு மற்றும் பணம் வழங்குவதை தடுக்கவும், தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 6 ஒன்றியங் களுக்கும் ‘தேர்தல் பறக்கும் படை’ அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் வருவாய் மற்றும் காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ள தாக ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 6 ஒன்றிய பகுதிகளுக்கு குழு-1ல் திருப்பத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் கவுரிசங்கர் (தொலைபேசி எண்:95852-11419) தலைமையில் 4 பேரும், குழு-2ல் நாட்றாம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் (93608-07518) தலைமையில் 4 பேரும், குழு-3ல் திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் (94447-33011) தலைமையில் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுவார்கள்.
அதேபோல, கந்திலி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 ஒன்றியப்பகுதிகளுக்கு குழு-1ல் நாட்றாம்பள்ளி தேர்தல் துணை வட்டாட்சியர் திருமலை (86085-28078) தலைமையில் 4 பேரும், குழு-2ல் நாட்றாம்பள்ளி மண்டல துணை வட்டாட்சியர் ஹரிதாஸ் (94446-49893) தலைமையில் 4 பேரும், குழு-3ல் வாணியம்பாடி தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சுதாகர் (99448-53282) தலைமையில் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, மாதனூர் ஆகிய 3 ஒன்றிய பகுதிகளுக்கு குழு-1ல் திருப்பத்தூர் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் நவநீதம் (86678-21002) தலைமையில் 4 பேரும், குழு-2ல் வாணியம்பாடி மண்டல துணை வட்டாட்சியர் சிவக்குமார் (97901-72814) தலைமையில் 4 பேரும், குழு-3ல் ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் ஜெகதீசன் (96263-53639) தலைமையில் 4 பேரும் சுழற்சி முறையில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT