Published : 16 Sep 2021 03:14 AM
Last Updated : 16 Sep 2021 03:14 AM

இன்று முதல் இணையதளம் வழியாக - நெல் கொள்முதலுக்கு முன்பதிவு தொடக்கம் : தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வரும் 30-ம் தேதி வரை நெல் கொள்முதல் செய்வதற்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்குகிறது என ஆட்சியர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தி.மலை மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அணுக்குமலை, கொளத்தூர், குன்னத்தூர், மண்டகொளத்தூர், வண்ணாங்குளம், தச்சூர், மாமண்டூர், எலத்தூர், வல்லம், மருதாடு, கொவளை, நல்லூர், நெடுங்குணம், நம்பேடு, மேல்சீசமங்கலம், பாராசூர், தவசிமேடு, நாவல்பாக்கம், புளியரம்பாக்கம், ஆக்கூர், நாட்டேரி, அரியூர், தூசி, வெம்பாக்கம், பெங்கட்டூர் ஆகிய 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங் கள் செயல்பட்டு வருகின்றன.

தி.மலை மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்காக tvmdpc.com என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தில் முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்பட்ட அனுமதி படிவம் இணையத்தில் விண்ணப்பிக்கும் போதே பதிவு செய்யும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

7.5 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ளதாக பதிவு செய்த விவசாயிகளின் விவரம் வருவாய் கோட்டாட்சியர் அளவில் சரிபார்த்த பிறகே நெல் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒளிவுமறைவற்ற நடைமுறையால் விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து முறைகேடான முறையில் நெல் கொள்முதல் செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் எதிர்பார்த்தைவிட அதிகளவு சாகுபடி செய்துள்ளதால் வரும் 30-ம் தேதி வரை நெல் கொள்முதல் செயல்படும்.

எனவே, கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நாட்களில் கொள்முதல் செய்வதற்கான முன்பதிவு இன்று (16-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. நெல் கொள்முதலில் ஏதாவது சந்தேகம் அல்லது அனுமதி படிவம் பெறுதல், தேவையற்ற கால தாமதம், சிக்கல்கள் இருந்தால் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் (9487262555), மாவட்ட ஆட்சியரின் வேளாண் நேர்முக உதவியாளர் (9364220624), வேளாண் அலுவலர் (9943983897) ஆகியோரை மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவித்தால் புகார்கள் சரி செய்யப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

7.5 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ளதாக பதிவு செய்த விவசாயி களின் விவரம் வருவாய் கோட்டாட்சியர் அளவில் சரிபார்த்த பிறகே நெல் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x