Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM
திருப்பூர் மாநகராட்சி, தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான சிறப்பு முகாம்களில் பங்கேற்றுவிண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர்கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
அனைவருக்கும் வீடு திட்டத்தில்,நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. பின்வரும் முகாம்களில் காலை 10.30முதல் மாலை 5.30 மணி வரை, பொதுமக்கள் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.
வரும் 16-ம் தேதி (நாளை) செட்டிபாளையம், இந்திரா நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம்-வார்டு எண்-2, 3, 4. அங்கேரிபாளையம் வரி வசூல் மையம் - 4, 5, 7, 8, 9-வது வார்டு.நெருப்பெரிச்சல் வரி வசூல் மையம் -16, 17, 18-வது வார்டு. நஞ்சப்பா நகர்மண்டல அலுவலகம் - 19, 20, 30-வது வார்டு. மண்ணரை வரி வசூல் மையம்- 31, 32, 33-வது வார்டு. நல்லுார் மண்டலஅலுவலகம் - 34, 35, 38, 39, 40, 41-வது வார்டு. வீரபாண்டி வரி வசூல் மையம் - 52, 53, 54-வது வார்டு. முருகம்பாளையம் வரி வசூல் மையம் - 55, 57, 58-வது வார்டு.
21-ம் தேதி மாஸ்கோ நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் - 12, 13-வது வார்டு. வேலம்பாளையம் மண்டல அலுவலகம் - 1, 6, 10, 11,14, 15-வது வார்டு. பிச்சம்பாளையம் பழைய மண்டல அலுவலகம் - 26, 27, 28, 29-வது வார்டு. புதுராமகிருஷ்ணா புரம் மாநகராட்சி பள்ளி - 21, 22, 23,24, 25-வது வார்டு. முத்தணம் பாளையம் வரி வசூல் மையம்- 36, 37-வது வார்டு.
தாராபுரம் சாலை மேல்நிலைத்தொட்டி வளாகம் - 42, 43, 44, 45-வது வார்டு. ஆண்டிபாளையம் மண்டல அலுவலகம் - 56, 59, 60-வது வார்டு. ராயபுரம் மேல்நிலைத் தொட்டி வளாகம் - 46, 47, 48, 49, 50, 51-வது வார்டு. தகுதியான விண்ணப்பதாரர்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9080114492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தாராபுரம்
தாராபுரம் நகராட்சி பகுதியில் தங்கள் பெயரிலோ அல்லது குடும்பத்தாரின் பெயரிலோ, சொந்த வீடோ, நிலமோ இல்லாத நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பயன்பெற விரும்பும் பயனாளி மற்றும் அவரது குடும்பத்தாரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு ஒதுக்கீடுபெற, அரசு நிர்ணயிக்கும் தொகை ரூ.1. 50 லட்சம் பங்களிப்புத் தொகையாக செலுத்த வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், 15-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு, நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
அப்போது, குடும்பத் தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி இருப்பு கையேடு நகல், குடும்பத் தலைவர் புகைப்படம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT