Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM
விழுப்புரம் மாவட்டத்தில் இரு கட் டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியங்கள் வாரியாக தேர்தல் தேதியை ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.
காணை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணாஅரசு கலைக் கல்லூரி மற்றும்முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட அரகண்டநல்லூர் லட்சுமி வித்யாஸ்ரமம் பள்ளி யில் அமைக்கப்பட்டுள்ள வாக்குஎண்ணும் மையங்களில் மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் மோகன் நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்குவதற்கான அறைகள், மாற்றுத்திறனா ளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலி செல்லும் வகையிலான சாய்வுதள வசதி, தடையில்லா மின்சார வசதியுடன் கூடிய மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சம்மந்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர் களிடம் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள் - 28, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் - 293, கிராமஊராட்சி தலைவர்கள் - 688 மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப் பினர்கள் - 5,088 என மொத்தம் 6,097 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
முதற்கட்டமாக அக்டோபர் 6-ம் தேதி செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய் நல்லூர், வானூர் மற்றும் விக்கிர வாண்டி ஆகிய ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடை பெறவுள்ளது.
இரண்டாம் கட்டமாக அக் டோபர் 9-ம் தேதி காணை, கோலியனூர்,மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர் தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 2,948 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன இவற்றில் 694பதற்றமான வாக்குச்சாவடி மையங் கள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தனித்தனியாக 13 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 688 ஊராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் 6,87,420 பெண் வாக்கா ளர்கள் 6,96, 115 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 158 ஆக மொத்தம் 13,83, 687 வாக்காளர்கள் உள்ள னர்.
வேட்பு மனுக்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (15ம் தேதி) முதல் 22-ம் தேதி வரை அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது எஸ்பி நாதா, திட்ட இயக்குநர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT