Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

மண்டபம் வங்கியில் ரூ.98 லட்சம் கையாடல் உதவி மேலாளர் மீது வழக்கு பதிவு :

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேங்க் ஆப் இந்தியா கிளையின் உதவி மேலாளர் வாஷிங்டன். இவர் வங்கியின் அலுவலகக் கணக்கில் இருந்து ரூ.98 லட்சத்தை தூத்துக்குடியில் உள்ள அவரது மனைவி மைக்கேல் ரதி வங்கிக் கணக்குக்கு ரூ.49 லட்சம் வீதம் இரு தவணையாகப் பரிவர்த்தனை செய்தார். அதன்பிறகு மைக்கேல் ரதி கணக்கில் இருந்த அந்தப் பணத்தை வெவ்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்தார்.

வங்கிக் கணக்கு தணிக்கையின்போது ரூ.98 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் வங்கியின் முதுநிலை மேலாளர் விஷ்வஜித்குமார் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x