Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM
ஏர்வாடி தர்ஹா உறுப்பினர் வீட்டில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொலை, கொள்ளையில் ஈடுபட முயற்சித்ததாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மேற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சர்வரேஆலம் செய்யது இபுராகீம் (56). இவர் ஏர்வாடி தர்ஹாவின் உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் முகமூடி அணிந்த 2 பேர் சென்றுள்ளனர். அந்த வீட்டில் அந்நியர்கள் உள்ளே வந்தால் எச்சரிக்கும் வகையில் சென்சார் விளக்குகள் எரிந்ததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் எழுந்து வந்ததும், முகமூடி அணிந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
மர்ம நபர்கள்
சர்வரே ஆலம் எழுந்து பார்த்தபோது, சிசிடிவி கேமரா வயர்கள் துண்டிக்கப்பட்டு, வீட்டின் ஒரு அறையில் டியூப் மூலம் பெட்ரோலை ஊற்றியுள்ளதும், வீட்டின் முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. மர்ம நபர்கள் கொள்ளையடிக்க வந்தார்களா? அல்லது கொலை செய்யும் நோக்கில் வந்தார்களா? என்பது தெரியவில்லை.
தடய அறிவியல் நிபுணர்
அதனையடுத்து நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், குற்றப்பிரிவு டிஎஸ்பி சீனிவாசன் உள்ளிட்டோர் அந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை செய்தனர். தடய அறிவியல் நிபுணர் மினித்தா தடயங்களை ஆய்வு செய்தார்.போலீஸ் மோப்ப நாய் ரோமியோ வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இதுகுறித்து சர்வரே ஆலம் ஏர்வாடி தர்ஹா போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT