Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM
திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 19 வாக்குச்சாவடிகளை சேர்த்து மொத்தம் 2,512 வாக்குச்சாவடிகள் உள்ளதாக ஆட்சியர் சு.வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.வினீத் நேற்று வெளியிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022-ன் முன் திருத்தப் பணிகள் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கின. வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,500 வாக்காளர்களுக்கும், அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய, வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
வாக்குச்சாவடிகள்
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT