Published : 10 Sep 2021 05:58 AM
Last Updated : 10 Sep 2021 05:58 AM

திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 150 பேருக்கு திருமணம் :

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் சாலையில் கூட்ட நெரிசலில் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.

கடலூர்

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் சாலையில் ஒரே நாளில் 150 பேருக்கு திருமணம் நடந்தது.

முகூர்த்த நாளான நேற்று கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் முன்பு மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் திரண்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் மலை மீது உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கோயில் முன்பு புறம் உள்ள சாலையில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அங்குள்ள திருமண மண்டபங்களிலும் 50-க்கும்மேற்பட்ட திருமணங்கள் நடை பெற்றன. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க பைக், கார்போன்ற வாகனங்களில் அதிகமானோர் வந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்த வர்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் திரண்டதால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய விழா நாட்களில் கூடுதல் கவனம் செலுத்தி கூட்டம் சேராதவகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x