Published : 10 Sep 2021 05:59 AM
Last Updated : 10 Sep 2021 05:59 AM
வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (எம்பிசி) பதிவுதாரர்கள் தங்களுடைய சாதி மற்றும் உட்பிரிவு சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டு ள்ள செய்திகுறிப்பு:
தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு(எம்பிசி) ஏற்கெனவே வழங்கப்பட்ட 20 சதவீத இட ஒதுக்கீட்டிற்குள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (வன்னியகுல ஷத்ரியர்)- 10.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் - 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 2.5 சதவீதம் என சிறப்பு உள் இட ஒதுக்கீடு வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பதிவுதாரர்கள் தங்களுடைய சாதி மற்றும் உட்பிரிவு சரியாக உள்ளதா என www.tnvelaivaaipu.gov.in இணையதள முகவரியிலோ அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு வருகிற 30-ம் தேதிக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT