Published : 10 Sep 2021 05:59 AM
Last Updated : 10 Sep 2021 05:59 AM
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை யடுத்து அப்பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் அருகே உள்ள அண்ணாமலை வீதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இந்த குடியிருப்பில் ஒரு வீட்டில் வசிக்கும் 3 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் அந்த பகுதி முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சுகாதாரத் துறையினர் அங்கு முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தொற்று ஏற்பட்ட குடியிருப்புப் பகுதியில் உள்ள மற்ற நபர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்முடிவுகள் வெளியான பின்னர் நோய் தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT