Published : 09 Sep 2021 03:15 AM
Last Updated : 09 Sep 2021 03:15 AM
கிருஷ்ணகிரியில் வெங்கடேஸ்வரா சில்க்ஸ் திறப்பு விழா நாளை (10-ம் தேதி) நடக்கிறது.
கிருஷ்ணகிரி நகரில் 81 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக விளங்கும் கே. தியேட்டர் ரோடு வெங்கடேஸ்வரா ஜூவல்லரியின் சார்பில், கே.தியேட்டர் ரோட்டில் வெங்கடேஸ்வரா சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடை கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நாளை (10-ம் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது.
விழாவில் டி.பி.வேலாயுதம்-வி.யசோதா, வி.ரமேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றுகின்றனர். வெங்கடேஸ்வரா குடும்பத் தினர் எஸ்.கமலம்மாள் பலராம செட்டியார், கிருஷ்ணகிரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.பி.சுரேஷ், எம்.பி.ரமேஷ், ஆர்.உமா, பி.ஆர்.விஷ்ணு, பி.ஆர்.விஷால், ரத்தினம்மாள் கோபால் செட்டியார், லதா ஜானகிராமன், எம்.பி.சுந்தரம், சீதா தேவராஜ், பாலாஜி, மணிகண்டன், சண்முகம் மற்றும் பி.கே.பி.எம்.எம். குடும்பத்தினர்கள் எம்.ராஜேந்திர வர்மா, போஜராஜ வர்மா, சுகந்தி தன்ராஜ் வர்மா உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
திறப்பு விழா குறித்து வெங்கடேஸ்வரா சில்க்ஸ் உரிமையாளர்கள் எம்.பி.ரமேஷ், பி.ஆர். விஷ்ணு ஆகியோர் கூறியதாவது:
81 ஆண்டுகளாக கைராசியான மற்றும் மக்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக வெங்கடேஸ்வரா ஜூவல்லரி இயங்கி வருகிறது. தற்போது வெங்கடேஸ்வரா சில்க்ஸ் திறப்பு விழா நாளை (9-ம் தேதி) நடக்கிறது. பட்டு, ஜவுளி, ரெடிமேட் ஆடைகள் பல டிசைன்களில் இங்கு கிடைக்கிறது.
4 தளங் களில் பிரமாண்டமான கலெக்சன் கள், டிசைன்கள் இங்கு உள்ளன. காஞ்சீபுரம், தர்மா வரம், ஆரணி, திருபுவனம், கும்பகோணம் பட்டுகள் மற்றும் இந்திய பாரம் பரிய பட்டுகளான வாரணாசி, அஜ்மீர், லக்னோ, பனாரஸ், உப்பாடா ஆகிய ரகங்கள் உள்ளன. குறிப்பிட்ட ரகங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆடைகள் வாங்கக் கூடிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
திருமணத்திற்கென பிரத் யேகமாக தயாரிக்கப்பட்ட மெல்லிய பட்டுகள் கலாரஞ்சலி, சாத் விகா, லக்ஷனா பட்டுகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT