Published : 08 Sep 2021 03:16 AM
Last Updated : 08 Sep 2021 03:16 AM
திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட சின்ன கருணைபாளையம் பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்துக்கு எதிரேஉள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வாடகை வீடுகளில் வங்கதேச நாட்டினர் சிலர் வசிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவிநாசி காவல் ஆய்வாளர் முரளி, உதவி ஆய்வாளர் கார்த்திக் தங்கம் உள்ளிட்ட போலீஸார் நேற்றுகாலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்துக்கு வேலைக்கு சென்ற சிலரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும்,மொத்தமாக 8 பேர் உரிய அனுமதி,ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 8 பேரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள், வங்கதேச நாட்டில் ஷேர்பூர் பகுதிசந்தோ நகர் தோலா கிராமத்தை சேர்ந்த எம்.ஜாகிர் உசைன் (23), கோமிளா பகுதி சந்தேனா சாத் கவுன் கிராமத்தை சேர்ந்த எஸ்.அலாமின் (29), ஷரித்பூர் பகுதி இடில்பூர் கிராமத்தை சேர்ந்த ஏ.லிட்டன் (30), காஸிபூர் பகுதிதால்தியா கிராமத்தை சேர்ந்த பி.பிப்லாப் ஹோசன் (23), மதரிபூரை சேர்ந்த இ.ரிதோயன் (23), காலிகாங் பகுதி கதாதார்தி கிராமத்தை சேர்ந்த கே.ராணா சர்ப்ரசி (22), தாக்கா நகரம் ஷமல்பூரை சேர்ந்த ஜே.பால்புல் அகமது (32), மதர்பூர் பகுதி கஸ்தாகூர் கிராமத்தை சேர்ந்த ஏ.மொஷின் உசைன் (33) என்பது தெரிந்தது.
8 பேரையும் வெளிநாட்டினருக்கான சட்டம் 1946-ன் கீழ் அவிநாசி போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும், அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின், சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT