Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM

ராஜபாளையம் அருகே ஆலையிலிருந்து கடத்தப்பட்ட 14 டன் நெல் பறிமுதல் :

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் தனியார் அரிசி ஆலையில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வணிபக் கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு வழங்கக்கூடிய அரிசியை அரைப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்குறிப்பிட்ட ஆலையிலிருந்து கேரளாவுக்கு நெல் மூட்டைகள் கடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட குடிமைப் பொருள் தனி வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து தனி வட்டாட்சியர் சங்கரபாண்டியன், தனி வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன், தனி வட்டாட்சியர் ராமநாதன், வில்லிபுத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் வழங்கப்பட்ட 44 டன் உயர்தர நெல்லில் இருந்து 14 டன் நெல் லாரி மூலம் கடத்தப்பட்டதை அறிந்து, ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் லாரியை மடக்கிப் பிடித்து நெல்லை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த 14 டன் நெல், அரிசிக்கு பதிலாக வெளி பகுதியில் இருந்து தரம் குறைந்த நெல்லை கொள்முதல் செய்து ரேஷன் அரிசியாக மாற்றி வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x