Published : 07 Sep 2021 03:15 AM
Last Updated : 07 Sep 2021 03:15 AM
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள எரவாஞ்சேரியில், வர்த்தக சங்கக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சங்கத் தலைவர் சாந்தகுரு தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடைத்தெருவில் உள்ள வர்த்தகர்கள் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு கைகழுவ சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் வைக்க வேண்டும்.
எரவாஞ்சேரி கடைத்தெருவில் விபத்து களை தவிர்க்கும் விதமாக பெட்ரோல் பங்க் அருகிலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், வர்த்தக சங்க உறுப்பினர் குமார் நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT