Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM
ஈரோட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும் எனதமாகா அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
தொழிற்சங்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில், சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். தொழிலாளர்களின் நலன் மேம்படும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தினசரி கூலியாக ரூ.500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஆவின் தொழிற் சங்க மாநில தலைவர் மூர்த்தி, மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர் அரபிக், எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் கண்ணம்மாள், துணைத் தலைவர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT