Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM
ஈரோடு நகரில் ஆகஸ்ட் மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 6,817 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.4.86 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், நகரின் முக்கியப் பகுதிகளான ஸ்வஸ்திக் கார்னர், பன்னீர் செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை ரவுண்டானா, ஆட்சியர் அலுவலகம், மூலப்பட்டறை, மணிக்கூண்டு, கொல்லம்பாளையம், காளைமாட்டு சிலை, சென்னிமலை சாலை, சூரம்பட்டி நான்கு ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், கடந்த ஒரு மாதத்தில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 5,487 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 146 வழக்கு, செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டியதாக 32 வழக்கு, இருசக்கர வாகனத்தில் மூவர் சென்றதாக 201 வழக்கு, போக்குவரத்து சிக்னலை மீறியதாக 144 வழக்கு, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 53 வழக்கு, அதிக பாரம் ஏற்றியதாக 3 வழக்குகள் என மொத்தம் 6,817 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT