Published : 06 Sep 2021 03:17 AM
Last Updated : 06 Sep 2021 03:17 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அதிமுக சார்பில் - உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் :

வேலூர்

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை கட்சி தலைமை அறி வித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக் கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. இதை யொட்டி, மாவட்டங்களில் புகைப் படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன் னிட்டு அரசியல் கட்சியினர் அதற்கான ஏற்பாடுகளையும், ஆலோ சனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக சார்பில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கட்சி யினருடன் நேற்று கலந்தாலோ சனை நடத்தினார்.

அதேபோல, அதிமுக தலைமை 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தேர்தல் பணிக்குழு பொறுப் பாளர்களை நேற்று முன்தினம் அறிவித்தது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் பழனிசாமி ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல் பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை யொட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் , 9 மாவட்டங்களுக்கு அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அதன்படி, வேலூர் மாவட் டத்துக்கு, வேலூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாநகர மாவட்டச்செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்டச்செயலாளர் வேலழகன் ஆகி யோரும், திருப்பத்தூர் மாவட் டத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி ஆகியோரும், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட, நகர, பேரூராட்சி, ஒன்றிய நிர்வாகிகள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் என அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் கட்சி பணியை சிறப்பாக செய்து, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x