Published : 05 Sep 2021 03:15 AM
Last Updated : 05 Sep 2021 03:15 AM
நீலகிரி மாவட்டம் உதகை கீழ்தலை யாட்டிமந்து பகுதியை சேர்ந்தவர்ஜீவானந்தம் (25). இவருக்கும், 17 வயதுடைய பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம் இருந்துள்ளது. திருமண ஆசை வார்த்தைகாட்டி சிறுமியை ஜீவானந்தம் பாலியல்வன்கொடுமை செய்துள்ளார்.இதில்சிறுமி கர்ப்பம் அடைந்தார் .தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சிறுமி பலமுறை வற்புறுத்தியும், ஜீவானந்தம்மறுத்துள்ளார்.
சிறுமியின் தாயார், ‘சைல்டு லைன்’ அலுவலர்களை தொடர்புகொண்டு தகவல் அளித்ததன் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு, பணியாளர்கள் விசாரணை நடத்தினர். சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானதை அடுத்து, உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ‘சைல்டு லைன்’ சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து,ஜீவானந்தத்தை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT