ரேஷன் கடைகளுக்கு அரிசி வழங்கல் -  ஆலை உரிமையாளர்களுடன் காஞ்சி ஆட்சியர் கலந்தாய்வு :

ரேஷன் கடைகளுக்கு அரிசி வழங்கல் - ஆலை உரிமையாளர்களுடன் காஞ்சி ஆட்சியர் கலந்தாய்வு :

Published on

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நடப்பு கொள்முதல் பருவம் 2020-2021-ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு தரமான அரிசியை வழங்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக செப். 15-ம் தேதி முதல்நவ. 15-ம் தேதி வரை நெல்லை அரவை செய்ய, அரிசி ஆலைஉரிமையாளர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 40 அரிசி அரவை ஆலை உரிமையாளர்கள் பங்கேற்றனர். நவீன வசதிகள் கொண்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் இந்தத் திட்டத்தில் நெல்லைப் பெற்று தரமான அரிசியை அரவைசெய்து கொடுத்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றுஆட்சியர் மா.ஆர்த்தி வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முதுநிலைமண்டல மேலாளர் வி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in