Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் ஆவணித் திருவிழாவில் 7-ம் நாளான நேற்று மாலை சுவாமிசண்முகர் சிவப்பு சார்த்தி எழுந்தருளல் நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்பின்றி இவ்வைபவம் நடைபெற்றது.
திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-ம் திருவிழாவான நேற்றுஅதிகாலை 5 மணிக்கு உருகுசட்ட சேவையாகி, சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் சுற்றி வந்து108 மகாதேவர் சன்னதி முன் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 5 மணியளவில் சுவாமி சண்முகர் சிவப்பு சார்த்தி அலங்காரத்தில் கேடய சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்தார். இதில் கோயில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. திருவிழா நிகழ்வுகள் யு-டியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
8-ம் திருவிழாவான இன்று (செப். 3) காலை வெள்ளை சார்த்தி அலங்காரத்திலும், பகலில் பச்சை சார்த்தி அலங்காரத்திலும் சுவாமி கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT