Regional02
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கரூர் பேராசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை :
கரூர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர் இளங்கோ(53). கடந்த 2019-ல் இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் இளங்கோவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.51 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட 5 மாணவிகளுக்கு ஒரு மாதத்துக்குள் தலா ரூ.1 லட்சம் வீதம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார்.
