Published : 30 Aug 2021 03:14 AM
Last Updated : 30 Aug 2021 03:14 AM

மின்கம்பியை சூழ்ந்திருக்கும் செடி கொடிகளால் மின்வெட்டு : சங்கராபுரம் அருகே கிராம மக்கள் அவதி

வடபொன்பரப்பியில் வீட்டின் மீது செல்லும் மின் கம்பிகளுக்கு கம்பில் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

உலகலப்பாடி ஏரிப் பகுதியில் மின் கம்பியில் செடி கொடிகள் சூழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

சங்கராபுரம் வட்டம் உலகலப்பாடி கிராமத்தில் ஏரியில் அமைந் திருக்கும் மின்மாற்றியிலிருந்து செல்லும் மும்முனை கம்பத்தில் செடி,கொடிகள் மின்சார கம்பி களை சுற்றிக்கொண்டும், மின்மாற்றிநோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்தப் பகுதியில் இரவுமுழுவதும் மின்சாரம் தடைபடுவ தாகக் கிராம மக்கள் கூறுகின்றனர். இதுபோன்று மின்சார ஓட்டத்துக்கு இடையூறு ஏற்படும் பகுதிகளை ஆராய்ந்து, அவற்றை அகற்ற ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு என்று நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் தொழில் மற்றும் விவசாயம் பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால் மின்வாரிய ஊழியர்கள் அதனைக் கண்டுகொள்வதில்லை.

மின்கம்பியை சூழந்திருக்கும் செடி கொடிகளை அகற்றவேண்டும் என வடபொன்பரப்பி மின்சாரஅலுவலகத்திற்கு புகார் கொடுத் தாலும் கண்டுகொள்வதில்லை என்கின்றனர் உலகலப்பாடி கிராம மக்கள்.

இதேபோன்று, வடபொன்பரப்பி யில் வீட்டின் மீது செல்லும் மின்கம்பியை அகற்றக் கோரி பெண்ஒருவர் மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும், இதுவரை நடவ டிக்கை இல்லை. ஆபத்தான நிலையை எதிர்கொள்ளும் விதமமாக அந்தப் பெண் கம்புநட்டு, மின்கம்பி தாழ்வாக செல்லும்நிலையை தவிர்த்துள்ளார். தற்போது மழைக்காலம் தொடங்கி யுள்ள நிலையில், மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மின்வாரியத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக வடபொன் பரப்பி மின்வாரிய உதவிப் பொறியாளர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘மின்கம்பியை செடிகொடிகள் சூழ்ந்த தகவல் தற்போது தங்கள் கவனத்திற்கு கொண்டு வரபட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின்கம்பி செல்லும் பாதைக்கு கீழே பெண்மணி வீடு கட்டியுள்ளார்.

வீடு கட்டுவதற்கு முன் அவர் முறையாக மனு கொடுத்துஅதற்குரிய பணம் செலுத் தியிருந்தால் அகற்றியிருப்போம்’’ என்றார்.

ஒரு பட்டா இடத்தில் மின்கம்பியையோ அல்லது மின்கம்பத் தையோ அமைக்கும் போது பட்டாதாரரிடம் தகவல் தெரிவிக்க வேண் டும் என்ற அடிப்படை விபரம் கூட தெரியாமல் உதவிப் பொறியாளர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்கின்றனர் கிராம மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x