Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM
நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
விவசாய சங்கங்களைச் சார்ந்த விவசாயிகளுடன் தோட்டக்கலை துணை இயக்குநர்கள் ஷிபிலா மேரி, குருமணி, இதர துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர். விவசாய சங்கங்களிடம் இருந்து 52 கோரிக்கைகள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டிருந்த மனுக்கள் மீதான விவரம் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது. மேலும், தோட்டக்கலைத் துறை மூலமாக புதுப்பிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வாழை,முட்டைகோஸ், கேரட்,பூண்டு, இஞ்சி, மரவள்ளி ஆகியபயிர்களுக்கு, பிரதம மந்திரி பசல் பீமா திட்டத்தின் மூலம் விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.
பிரீமியத் தொகையாக உருளைக் கிழங்கு ஏக்கருக்கு ரூ.4,891, வாழைக்கு ரூ.4,347, முட்டைகோஸுக்கு ரூ. 3,893, பூண்டுக்கு ரூ.4,950, இஞ்சிக்கு ரூ.4,532, மரவள்ளிக்கு ரூ.1,759 செலுத்த வேண்டும். வாழை, மரவள்ளி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 15. ஏனைய பயிர்களுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, பேரூராட்சிகளில் கால்நடைகொட்டகை அமைக்க தீர்மானம்சமர்ப்பிக்குமாறும் ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், இக்கூட்டத்தில்நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தீவன பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கவும், வன விலங்குகளிடம் இருந்து விவசாய நிலங்களை காக்க, மானியவிலையில் மின்வேலி அமைக்கும் திட்டங் களை பயன்படுத்தவும் விவசாயி கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அத்துடன், நடப்பாண்டில் நியாயவிலைக் கடைகள் மூலமாக அரிசியுடன் ராகி வழங்கும் திட்டம்,நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்த இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். இதற்காக தோட்டக்கலைத் துறை, விவசாயிகளை ஒருங்கிணைத்து ராகி சாகுபடி செய்வதற்கான திட்டத்தை வரையறுக்க அறிவுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT