Regional02
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல் :
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை செயற்குழுக் கூட்டம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குமரிஅனந்தன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
