Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM
குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால (1 முதல் 6 மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.
தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள தாட் கோவின் http://training.tahdo.com/ என்ற இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்யலாம். மேலும், மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து படி வழங்கப்படும்.
இப்பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எஸ்சிவிடி அல்லது எஸ்எஸ்சி சான்றிதழ் வழங்கப்பட்டு, பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். பயிற்சி தொடர்பான தொழில் தொடங்க அரசு மானியத்துடன் வங்கி கடன் வழங்க ஆவண செய்யப்படும்.
மேலும், இதுதொடர்பான விவரங் களை 04343-238881 என்ற தொலைபேசி எண் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT