Published : 26 Aug 2021 03:15 AM
Last Updated : 26 Aug 2021 03:15 AM
மதுரை கோட்ட ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தில் அதிகவருவாய் ஈட்டக்கூடிய நகரமாகதூத்துக்குடி விளங்கி வருகிறது.தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு ஏற்றுமதிக்காக பல்வேறு நகரங்களில் இருந்து ரயில்கள் மூலம் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரயில் மூலம் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ரயில் மூலம் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க பல்வேறுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் நேற்று தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து ரயில் பாதை பிரிவை ஆய்வு செய்தார். பின்னர் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொழில் வர்த்தக நிறுவன பிரமுகர்கள், ஸ்பிக் நிறுவன இயக்குநர்கள் ராமகிருஷ்ணன், பாலு ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT