Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM
நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லங்களில் படகு சவாரி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.
புதிய கட்டண முறையில் வார நாட்கள், வார விடுமுறை நாட்கள்,சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் விரைவு சவாரி கட்டணம் என 3 வகையாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2 இருக்கைகள் கொண்ட மிதி படகில் சவாரி செய்யரூ.500, ரூ.600, ரூ.700, 4 இருக்கைகளுக்கு ரூ.700, ரூ.800, ரூ.1,000, 4 இருக்கைகள் கொண்ட துடுப்புப் படகில் சவாரி செய்ய ரூ.800, ரூ.900, ரூ.1,100, 6 இருக்கைகளுக்கு ரூ.900, ரூ.1,000, ரூ.1,200, 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.800, ரூ.900, ரூ.1,100, 10 இருக்கைகளுக்கு ரூ.1,000, ரூ.1,100, ரூ.1,300, 15 இருக்கைகளுக்கு ரூ.1,400, ரூ.1,550, ரூ.1,900 என நேற்றுமுதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.இதில், ஓட்டுநர் கட்டணம், முன்வைப்புத்தொகை அடங்கும். டிக்கெட் ஸ்கேன் செய்து அரை மணி நேரத்தில் சவாரி முடித்து வந்தால் முன்வைப்புத்தொகை வழங்கப்படும்.
பைக்காரா படகு இல்லத்தில் 8 இருக்கைகள் கொண்ட மோட்டார்படகில் சவாரி செய்ய ரூ.1,000, ரூ.1,100, ரூ.1,300, 10 இருக்கைகளுக்கு ரூ.1,200, ரூ.1,350, ரூ.1,600,அதிவேக படகில் சவாரி செய்ய ரூ.1,000, ரூ.1,100, ரூ.1,300 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. படகுகள் எரிவாயு மூலம் இயக்கப்படும் நிலையில், எரிவாயுசிலிண்டரின் விலை உயர்வால், சவாரி கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டண உயர்வுக்கு அதிருப்திதெரிவித்த சுற்றுலா பயணிகள் கூறும்போது ‘‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான நுழைவுக்கட்டணம் கடந்தாண்டு உயர்த்தப்பட்டது. தற்போது படகு சவாரி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இனி, உதகைக்கு வருவது என்பது நடுத்தர மக்களுக்கு ஆடம்பரமாக மாறிவிடும். சுற்றுலா என்பதேஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக போய்விடும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT