Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM

விவசாயி கொலையில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் :

ராமநாதபுரம்

பரமக்குடி அருகே செவ்வூரைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் திருநாவுக்கரசு (45). இவர் தஞ்சாவூரில் ஆட்டுக்கிடை வைத்துள்ளார்.

அதே ஊரைச் சேர்ந்த கர்ணன் மகன் அஜீத்(24) குடும்பத்தினரும் தஞ்சாவூரில் ஆட்டுக்கிடை வைத்துள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசுக்கு, அஜீத்தின் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திருநாவுக்கரசு 4 நாட்களுக்கு முன்பு செவ்வூருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை செவ்வூரில் தனது மூத்த சகோதரி மூர்த்தியம்மாளுடன் திருநாவுக்கரசு நடந்து சென்றார். அப்போது அஜீத்தும், அவரது உறவினர் சச்சினும் (19) திருநாவுக்கரசை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அஜீத்தும், சச்சினும் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon