ஜாதி சான்றிதழ் கேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாணவர்கள் .
ஜாதி சான்றிதழ் கேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாணவர்கள் .

பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் மாணவர்கள் மனு :

Published on

திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பழங்குடியினர் சான்றிதழ் கோரி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தரிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பது: திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஜாதி சான்றிதழ் கேட்டு4 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். தற்போது பிளஸ் 2 முடித்து விட்டு மேற்படிப்பிற்காக கல்லூரிகளில் சேர ஜாதி சான்றிதழ் அவசியமாக உள்ளது. இதற்காக விண்ணப்பித்தும் இதுவரை வருவாய்த் துறையினர் சான்று வழங்கவில்லை. இதனால் அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியாமலும், கல்லூரிகளில் சேர்ந்து பயில முடியாத நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in