Published : 23 Aug 2021 03:14 AM
Last Updated : 23 Aug 2021 03:14 AM

விழுப்புரம் ஆசாகுளத்தை தூர்வார வேண்டும் : சுற்றிலும் நடைபாதை அமைக்கவும் ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வுசெய்யும் ஆட்சியர் த.மோகன்.

கள்ளக்குறிச்சி

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் நகராட்சி சேவியர் காலனியில் பாதாளை சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட் டுள்ள கழிவு நீரேற்று நிலையத்தைலட்சுமணன் எம்எல்ஏ முன்னிலை யில் மாவட்ட ஆட்சி யர் மோகன் நேற்று ஆய்வு செய்தார். கழிவுநீர் தேங்காத வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பொதுமக்களின் கோரிக்கை யைத் தொடர்ந்து ஆசாகுளத்தை பார்வையிட்டார். ஆசாகுளத்தை முழுமையாக தூர்வார வேண்டும். குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதை தடுக்கும் பொருட்டு சாலையோர கழிவுநீர் கால்வாய் அமைக்க அறிவுறுத்தினார்.

இதேபோல் மருதூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

சாலாமேடு பகுதியில் குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத் தவும் கேட்டுக்கொண்டார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக அமைக்கப் பட்டுள்ள வெள்ளநீர் வெளியேற்று நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் பார் வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x