Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM

குருவிநாயனப்பள்ளியில் திட்டப்பணிகளைஎம்எல்ஏ தொடங்கி வைத்தார் :

கிருஷ்ணகிரி

பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குருவிநாயனப்பள்ளி ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை மதியழகன் எம்எல்ஏ., தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையில் உள்ள குருவிநாயனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட காளிக்கோவில் அருகில் உள்ள குண்டூசிக்கொட்டாய் கிராமத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி, குருவிநாயனப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது, மசூதிக்கு சுற்றுச்சுவர் கட்டுவது என சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டு, அதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். இதில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் பங்கேற்று, ரூ.11 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x