Published : 20 Aug 2021 06:40 AM
Last Updated : 20 Aug 2021 06:40 AM
ராமநாதபுரத்தில் வழிப்பறி, கொள்ளை யில் ஈடுபட்ட வேலூரைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்
ராமநாதபுரம் ரயில் நிலையப் பகுதியில் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் நேற்றுமுன்தினம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற வேலூர் பதிவெண் கொண்ட காரை சோதனையிட்டனர். அதில் 2 வாள்கள், 2 கத்திகள், ரூ.1 லட்சம் ஆகியவற்றை கைப்பற்றினர். அதிலிருந்த 6 பேரையும் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருடத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அதனடிப்படையில் கும்பலுக்கு தலைமை வகித்த கீழக்கரையைச் சேர்ந்த செய்யது முகமது பாக்கர் (47), வேலூர் பிஷப்டேவிட் நகரைச் சேர்ந்த ரஹீம் (32), வேலூர் ஓட்டேரியைச் சேர்ந்த பார்த்திபன் (43), கார்த்திக் (41), வேலூர் பங்களா பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் (44), வேலூர் ஆரணி சாலையைச் சேர்ந்த ராபர்ட்ஜான் கென்னடி (30) ஆகியோரை கைது செய்தனர்.
பிடிபட்ட கும்பலிடம் நடந்த தீவிர விசாரணையில் 2020 மார்ச்சில் இக்கும்பல் ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் களிடம் ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது. அப்பணம் ஹவாலா பணம் என்பதால் யாரும் புகார் அளிக்கவில்லை. அத்துடன் சென்னை யைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டிலும், பல இடங்களிலும் இக்கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT