Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM
காங்கிரஸ் கட்சியின் நீலகிரி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கார்த்திக் தங்கபாலு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கட்சிநிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். உதகை அருகேயுள்ள நஞ்சநாடு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தியாகிகளின் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களை கவுரவித்தார்.
குந்தா வட்டாரத் தலைவர் நேரு, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ஜே.பி.சுப்ரமணியம், பொதுச்செயலாளர் ரவிகுமார், உதகை நகரத் தலைவர் கெம்பைய்யா, உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT