Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM

பொய்கை கால்நடை சந்தைக்கு தடை :

வேலூர்

கரோனா பரவல் தொற்று அச்சத்தால் பொய்கை கால்நடை சந்தை வரும் 17-ம் தேதி மூடப்படுகிறது என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிக்காக பல்வேறு நிலை களில் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அணைக்கட்டு வட்டம் பொய்கை கிராமத்தில் நடைபெறும் கால்டை சந்தையைபொதுமக்கள் நலன் கருதி ஒரு வாரத்துக்கு மூடப்படுகிறது.

அதன்படி, வரும் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற வேண்டிய சந்தை நடைபெறாது. தடையை மீறி சந்தையில் கால்நடைகளை விற்னை செய்வோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தக்க தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x