Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மதுபானக்கடைகள் மூடப்படும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (மதுக்கடை மற்றும் மதுக்கூடம்) விதிகள் 2003-ல் 12-வது விதியின்படி, சுதந்திர தினத்தன்று மதுபான விற்பனை இல்லா தினமாக கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நாளை (15-ம் தேதி) சுதந்திர தினத்தன்று மதுபான விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்கப்படுவதால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்) மற்றும் (ஏற்கெனவே கரோனா நோய் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள்) அனைத்தும் மூடப்படும். இந்த உத்தரவினை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT