Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM

சென்னை நந்தனத்தில் நாளை பாரம்பரிய பிரியாணி மேளா : `பிரியாணி ஆன் தி வுட்’ நிறுவனம் நடத்துகிறது

சென்னை

பாரம்பரியமான முறையில் பிரியாணி மற்றும் அசைவ உணவு வகைகளை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ‘பிரியாணி ஆன் தி வுட்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் பாரம்பரியமான முறையில் விறகு அடுப்பை மட்டுமே பயன்படுத்தி, முதல்தரமான அரிசி, எண்ணெய், நெய், இறைச்சி ஆகியவற்றுடன் சொந்தமாக தயாரித்த மசாலா பொருட்களை மட்டுமே பயன்படுத்தி பிரியாணி சமைப்பது தனிச்சிறப்பு.

கடந்த 3 தலைமுறைகளாக செயல்பட்டுவரும் இந்நிறுவனம், மக்களின் விருப்பத்துக்கு இணங்க நாளை (ஆக. 15) மதியம் 12:30 மணி முதல் 3 மணி வரை சென்னை, நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை அருகில் உள்ள மந்த்ரா ஹாலில், பிரியாணி மேளாவை 4-வது முறையாக நடத்துகிறது.

முதல்தர மட்டன் பிரியாணியுடன் நல்லெண்ணெய்யில் சமைத்த கத்தரிக்காய் பச்சடி, ஆனியன் ரைத்தா, பிரட் அல்வா ஆகியவற்றை குடும்பத்துடன் வந்து சுவைத்து மகிழலாம். பிரியாணி பார்சலும் வழங்கப்படும்.

வீட்டு விசேஷங்களுக்கு பிரியாணி சப்ளை செய்ய 8099944444 / 9444258340 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பிரியாணி ஆன் தி வுட் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x