Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியிலிருந்து நேற்று 18 டன் சமையல் எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று, ஆந்திர மாநிலம், கடப்பாவுக்கு சென்று கொண்டிருந்தது.
அந்த லாரி செங்குன்றம் அருகே வளைவில் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதுகுறித்து, தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடம் விரைந்து சென்று4 பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு, சுமார் ஒரு மணி நேரம் போராடி டேங்கர் லாரியை பத்திரமாக மீட்டனர்.
விபத்து நடந்த இடத்தின் அருகில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இருப்பதால் அங்கு சோழவரம் போலீஸார், சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தி யாரும் அருகில் செல்லாதவாறு மாற்று வழியில் அனுப்பி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT