Published : 14 Aug 2021 03:20 AM
Last Updated : 14 Aug 2021 03:20 AM
மதுரையில் வார விடுமுறை நாட்களில் கரோனா தடுப்பூசி மையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி மருந்து வழங்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின், கோவி ஷீல்டு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இம்மையங்களுக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை சுகாதாரத் துறையினர் வழங்கி வருகின்றனர். பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை தடுப்பூசி செலுத்த குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வருகின்றனர்.
வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் மக்கள் தடுப்பூசி செலுத்த வருகின்றனர். ஆனால் தடுப்பூசி குறைவாக இருப்பதால், ஏராளமானோர் தடுப்பூசி செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, வார விடுமுறை நாட் களில் கூடுதல் தடுப்பூசிகளை சுகாதாரத் துறையினர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT