Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM
தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேநீர் கடைகள், பேக்கரி, மெஸ், கேன்டீன், இரவு கடைகள், உணவகங்களில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை ஈ மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வண்ணமும், தூசிகள் படியும் வகையிலும் திறந்த நிலையில் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
மேலும், உண்பதற்கு தயாராகஉள்ள உணவுப் பொருட்களை காகிதங்களில் இலை ஏதுமின்றி நேரடியாக வைத்து நுகர்வோருக்கு வழங்கி வருகின்றனர். அனைத்து உணவுப் பொருட் களையும் திறந்த நிலையில் வைத்துவியாபாரம் செய்யக் கூடாது.திறந்த நிலையில் வைத்து வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு முதல் முறை ரூ. 1,000, இரண்டாவது முறை ரூ. 2,000 மாவட்ட நியமன அலுவலரால் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாகதவறு செய்தால், ரூ. 5,000அபராதம் விதிக்கப்படுவதுடன், பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழக்கு பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பாதுகாப்பு உரிமமின்றியும், சுகாதாரமற்ற வகையிலும் வியாபாரம் செய்தால், குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT