Published : 14 Aug 2021 03:22 AM
Last Updated : 14 Aug 2021 03:22 AM
ஆம்பூர் அருகே வீட்டு திண்ணையில் படுத்து உறங்கிய கட்டிட மேஸ்திரி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள பெரியாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.சி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவக் குமார் (35). கட்டிட மேஸ்திரி. இவரது வீட்டின் திண்ணையில் நேற்று முன்தினம் இரவு உறங்கியவர் நேற்று காலை பார்த்தபோது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவக்குமாருக்கு திருமண மாகி கவுரி என்ற மனைவியும் 2 பெண்கள், 1 ஆண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் மீது ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
கொலை குறித்த தகவலின்பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, ஆம்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப் பாளர் சரவணன், காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், சிவக்குமார் கொலை வழக்கில் அவரது தாயார் ராஜேஸ்வரியை நேற்று காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT